நஞ்சை புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் விழா
ADDED :3631 days ago
தூ.நா.பாளையம்: கோபி தாலுகா, தூக்கநாயக்கன்பாளையம் அருகேயுள்ள நஞ்சை புளியம்பட்டி, கரிவரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத பிறப்பையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே சமயம், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.