ஜெனகை மாரியம்மன் கோயில் ரூ.21 லட்சத்தில் புதிய தேர்
ADDED :3643 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலுக்கு ரூ.21 லட்சத்தில் சிற்ப சித்திரத்தேர் தயாராகி வருகிறது. இக்கோயிலில் வைகாசி மாத திருவிழாவில் தேரோட்டம் நடக்கும். கடந்தாண்டு மரச்சட்டங்கள் முறிந்து, சக்கரங்கள் உடைந்து தேர் பழுதானது. புதிய தேர் அமைக்க பல ஆண்டுகளாக பக்தர்கள்கோரி வந்த நிலையில், அறநிலையத்துறை ஒதுக்கிய ரூ.21 லட்சத்தில் தேர் பணி செய்யும் பணி, பண்ருட்டி குமரகுருபரன் ஸ்தபதி தலைமையில் நடந்து வருகிறது. இப்பணிக்கு உதவ விரும்பும் நன்கொடையாளர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாக அதிகாரி லதா தெரிவித்தார்.