உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமணர் கோவிலில் ஆபத்தான நிலையில் சுவர்கள்!

வெங்கட்ரமணர் கோவிலில் ஆபத்தான நிலையில் சுவர்கள்!

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் சுவர்கள் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. செஞ்சியில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டையை சிறந்த வடிகால் வசதியுடன் நேர்த்தியாக கட்டி உள்ளனர். மழை நீர்  வீணாகாமல் தேங்கி வைக்க ஏராளமான குளங்களை அமைத்துள்ளனர். இவைகள் நிரம்பினால் மழை நீர் அகழிகளுக்கு செல்லும் வகையில் கோட்டையை வடிவமைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தாலும், எந்த பகுதியிலும் நீர் தேங்கி நிற்காது. ஆனால் தற்போது செஞ்சி கோட்டையில்  உள்ள வெங்கட்ரமணர் கோவில் நுழைவு வாயில் பகுதியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆஞ்சநேயர் கோவில் அரு கே உள்ள செட்டிகுளம் நிரம்பி  வெளியேறும் உபரி நீர் வெங்கட்ரமணர் கோவிலை ஒட்டி உள்ள, பெரிய வாய்க்கால் வழியாக குத்தரிசி மலை கோட்டை மதில் சுவருக்கு கீழே மண்டபம் போன்ற அமைப்பின் வழியாக, அடுத்துள்ள அகழிக்கு செல்லும் வகையில் கோட்டையை  வடிவமைத்துள்ளனர். இந்த வாய்க்கால் வழியாகவே வெங்கட்ரமணர் கோவிலில் இருந்தும் மழை வெள்ளம் வெளியேற சாளரம் அமைத்துள்ளனர்.

இந்த வாய்க்கால் செல்லும் கோட்டை மதில் சுவர், மண்டபம் வழியாக வெளி நாபர்களும், ஆடு, மாடுகளும் வருவதை தடுக்க மழை வெள்ளம்  செல்லும் வழியில் சிறிய பரப்பில் வழி விட்டு,மற்ற  இடத்தில் இந்திய தொல்லியல் துறையினர் தடுப்பு சுவர் கட்டியுள்ளனர். இதனால் மழை  வெள்ளம் செல்ல முடியாமல் தேங்கி வெங்கட்ரமணர் கோவில் ராஜாகோபுரம் எதிரே குளம் போல் தேங்கி உள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால்,  சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பி வருகின்றனர். அத்துடன் 500 ஆண்டுகள் பழமையான வெ ங்கட்ரமணர் கோவிலின் சுவர்களும் தேங்கி உள்ள மழை நீரால், பலவீணமடையும் வாய்ப்புள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை விரைவில்  வெளியேற்றும் வகையில் சரியான ஏற்பாடுகளை இந்திய தொல்லியல் துறையினர் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !