ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம்
மூணாறு: மூணாறில் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூணாறு நகரில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை கோமாதா பூஜையுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு, பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தை வைத்து, விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சந்தனம்,நெய், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. மூணாறு இந்து தேவஸ்தானம் நிர்வாகிகள் சேலக்கல் பாபுலால், ஜெயராமன், எஸ்.கே.கணேசன், சேலக்கல் கணேசன் மற்றும் அனைத்து பழநி பாதயாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி விநாயகர் பொறுப்பாளர்கள் சசி, தாஸ் மற்றும் விழாக்குழு தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ஆனந்தன், பொருளாளர் விஜயகுமார் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.