உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு விழா துவக்கம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று, கடைஞாயிறு விழா துவங்கியது. பக்தர்கள் வேண்டுதலுக்காக மண் சட்டியில் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கடைஞாயிறு விழா நடைபெறும்.அன்று பக்தர்கள் வேண்டுதலுக்காக மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து வழிபடுவர். இந்த ஆண்டு, இவ்விழா நேற்று துவங்கியது. விழாவில் பக்தர்கள் திரளாக வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற மண் சட்டியில் மாவிளக்கு எடுத்து கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். இந்த விழாவில் காஞ்சிபுரம் அதை சுற்றியுள்ள சிறுகாவேரிபாக்கம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், கூரம், பாலுசெட்டி சத்திரம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் வந்து வழிபட்டு செல்வர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !