ரத்னகிரீஸ்வரர் கோவிலில் யஜூர் வேத பாராயணம்
ADDED :3656 days ago
பெசன்ட்நகர்: பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், யஜூர் வேத பாராயணம் துவங்கி நடந்து வருகிறது.வேத பாராயணத்தில், மூலம், கிரமம், ஜடை, கணம் என நான்கு வகையான பாராயணங்கள் உள்ளன. அவற்றில், கண பாராயணம் என்பது மிகவும் கடினமானது. ஒரு மாணவன் அதில் தேர்ச்சி பெற, ௧௫ ஆண்டுகள் ஆகும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவருக்குத் தான், கண பாடிகள் என்ற பட்டம் அளிக்கப்படும். யஜூர் வேத கண பாராயணம், பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், நான்காவது ஆண்டாக, கடந்த, ௧௭ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மொத்தம் ௪௫ நாட்களுக்கு நடக்கும் இந்த பாராயணம், டிச., ௩௦ம் தேதி வரை நடக்க உள்ளது. விருப்பம் உள்ளோர் இதில் பங்கேற்கலாம் என, கோவிலில் இயங்கி வரும் பக்த மண்டலி அமைப்பு தெரிவித்துள்ளது.