மணிகண்டேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3656 days ago
உழுந்தை: உழுந்தையில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில், இன்று, 108 சங்காபிஷேகமும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.மப்பேடு அடுத்துள்ளது உழுந்தை கிராமம். இங்குள்ள மங்களாம்பிகை உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவிலில், 15ம் ஆண்டு, 108 சங்காபிஷேகமும், சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் இன்று நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, யாகபூஜை மற்றும் மகா பூர்ணாஹூதியும், காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், பகல், 12:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடைபெறும். பின், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், இரவு, 8:00 மணிக்கு சுவாமி அம்பாள் வீதியுலாவும் நடைபெறும்.