விளக்கேற்ற நல்ல நேரம்!
ADDED :4004 days ago
தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலையில் வீடு முழுக்க விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகளுக்கு குறையாமல் ஏற்றுவதே முறையானது.