உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனைவியை குறை சொல்லாதீர்!

மனைவியை குறை சொல்லாதீர்!

கணவரை நச்சரித்து ஏதேனும் கேட்டுக்கொண்டே இருப்பது சில பெண்களுக்கு வாடிக்கை. அதுபோல மனைவியைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்திமதி சொல்கிறார் நபிகள் நாயகம்.உங்கள் மனைவியைப் பற்றி முடிந்தளவுக்கு நல்ல எண்ணமே வைத்திருங்கள். அவளுடன் சேர்ந்து வாழவே எண்ணுங்கள். ஒருவேளை அவள் உங்களிடம் சரிவர நடந்து கொள்ளாவிட்டாலும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். அவளது குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவளது முகம், உடலமைப்பு, பழக்க வழக்கங்கள், வீட்டைப் பேணும் முறை ஆகியவற்றில் குறை இருந்தாலும், அதை பெரிதுபடுத்தாதீர்கள். அவளது நல்ல குணங்களை கவனத்தில் கொள்ளுங்கள். தவறு செய்தாலும், குறைபாடு இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். அர்ப்பணிப்புடனும், விவேகத்துடனும் செயல்படுங்கள், என்று அவர் கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !