உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்திருநாளை முன்னிட்டு மாவொளி செய்யும் பணி மும்முரம்

தீபத்திருநாளை முன்னிட்டு மாவொளி செய்யும் பணி மும்முரம்

அவலூர்பேட்டை: வளத்தியில் தீபத்திருநாளை முன்னிட்டு மாவொளி செய்யும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தீபத்திரு நாள் இன்று துவங்குவதையொட்டி, தொடர்ந்து மூன்று நாள் மாலை நேரங்களில்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில், கார்த்தி எனும்  மாவொளி சுற்றுவது வழக்கம். பனை மரத்திலுள்ள பூக்களை உலர வைத்து, அதை நெருப்பிலிட்டு கரியாக்கி, துõளாக்கி அதை உலர்த்துவர். இந்த  பொடியை ஒரு துணியில் சுற்றி கட்டிய பின்னர்,  ஒரு பனைமட்டையை நான்காக பிரித்து அதில் வைத்து கட்டினால் போதும் மாவொளி தய õராகிவிடும். இந்த துணி பகுதியில் தீ வைத்து வேகமாக சுழற்றும் போது மாவொளி சிதறி அழகாக விழும். இதை தலையை சுற்றி சுழற்றுவதால்    பிணிகள், குறைகள், பீடைகள்   தீரும் என்பது ஐதீகம். ஒரு மாவொளி 20 ரூபாய் என விற்பதற்காக,  வளத்தியில் தொழிலாளிகள்  மாவொளிகள்   செய்யும் பணியில் மும்முரமாக  ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !