தேசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3652 days ago
பெ.நா.பாளையம்: சின்னமத்தம்பாளையத்தில், நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரமாஸ்தியம்மன் உடனமர் ஆலுார் தேசிலிங்கேஸ்வரர் ÷ காவில் நான்காம் ஆண்டு விழா நடந்தது. காலையில் கணபதி வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், கங்கா தீர்த்தம் அழைத்தல், அபிஷேகம், தீபாராதனை, முதல் கால யாக வேள்விகள் நடந்தன. மறுநாள் காலை, தேசிலிங்கேஸ்வரர் வீரமாஸ்தியம்மனுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடு, திருக்கல்யாண உற்சவம், சுவாமி, அம்பாள் உலா நிகழ்ச்சிகள் நடந்தன.