உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் 500வது பவுர்ணமி விழா

உடுமலை மாரியம்மன் கோவிலில் 500வது பவுர்ணமி விழா

உடுமலை: சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில், இன்று 500வது பவுர்ணமி விழா, நடக்கிறது. உடுமலை அருகே சின்னவாளவாடியில் அமைந்துள்ளது, மாரியம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த, 1974ம் ஆண்டு முதல், ஒவ்வொரு பவுர்ணமியன்று விழா நடத்தப்பட்டு வருகிறது.கடந்த, 41 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும், இவ்விழா இன்று, 500வது பவுர்ணமி விழாவாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை தினமான இன்று மாலை, 6:30 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சோடஷ அபிேஷக ஆராதனை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.இரவு, 7:30 மணிக்கு, அம்மனுக்கு, 500வது பவுர்ணமி சிறப்பு அலங்கார, ஆராதனை பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !