உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர்: கரூர் அருகே, பொரணியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இப்பகுதி ரெட்டியார் சமூகத்தினர் திருப்பதி சென்று, அங்கிருந்து மண் கொண்டு வரப்பட்டு திருப்பணி பூஜையை துவக்கினர். ஜெகதாபி கிராமத்தில் உள்ள பொரணியில் புதிகாக அமைக்கப்பட்டட ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில், மூலவர் அறை பளிங்கு கற்களாலும், கோபுரம், அர்த்தமண்டபம், புதிய கல்தூண் என, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், ஸ்வாமிக்கு கண்திறத்தல், மருந்து சாத்துதல் போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !