ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷம் கோலாகலம்
ADDED :3651 days ago
கரூர்: கரூர் மாவட்ட ஈஸ்வரன் கோவில்களில், பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் பசுபதீஸ்வரர் கோவில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர், குளித்தலை கடம்பர் கோவில், அய்யர்மலை சிவன் கோவில், சிவாயம் சிவன் கோவில், ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில், புலியூர் வியாக்ராபுரீஸ்வரர் கோவில் போன்ற மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் நேற்றுமுன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர். அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம், மஞ்சள், சந்தனம், திரவியப் பொருட்கள் கொண்டு பல்வேறு அபி?ஷகங்கள் நடந்தது. அதன்பின் ஈஸ்வரன் மற்றும் நந்திக்கு மலர்கள், காய்கறிகளால் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.