ஆடி அமாவாசை திருவிளக்கு பூஜை
ADDED :5203 days ago
திட்டக்குடி : கொடிக்களம் செல்லியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் அதர்வண பத்ரகாளி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 500க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து அதர்வண பத்ரகாளி யாகம் நடந்தது.பூஜையை திருக்கடையூர் மகேஸ்வர குருக்கள் தலைமையில் ராஜமன்னார்குடி சங்கர் குருக்கள், திருவாரூர் அருண் குருக்கள் உள்ளிட்ட புரோகிதர்கள் நடத்தினர். இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.