பெருமுக்கல் மலையில் கார்த்திகை மகர தீபம்!
ADDED :3649 days ago
முருக்கேரி: பெருமுக்கல் மலை மீதுள்ள முத்தியாஜல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மகர தீபம் ஏற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த முருக்கேரி அருகே உள்ள பெருமுக்கல் மலை மீது, பிரசித்தி பெற்ற முத்தியாஜல ஈஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்று காலை 10.00 மணிக்கு மூலவருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:௦0 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 5:30 மணிக்கு, 1,600 அடி உயரமுள்ள மலை உச்சியில், 108 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், மகர தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏறும் வழியில் மின் விளக்கு வசதி செய்யாததால், பக்தர்கள் அவதியடைந்தனர்.