உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் தீப திருவிழா!

சித்தி விநாயகர் கோவிலில் தீப திருவிழா!

விழுப்புரம்: விழுப்புரம் சித்தி விநாயகர் கோவிலில் சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.  விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் தீப திருவிழாவை யொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பெண்கள் கோவிலை சுற்றி, அகல் விளக்கு தீபம் ஏற்றினர். பின்னர் 6:15 மணிக்கு கோவிலின் முன்பு சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !