திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர் வெள்ளம்
ADDED :3649 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்த மாதம் பவுர்ணமி, நேற்று அதிகாலை, 6.41 மணி முதல், இன்று(நவ.26) தேதி அதிகாலை, 4.19 மணி வரை உள்ளது. பவுர்ணமியும், மஹா தீபமும் ஒரே நாளில் வந்ததால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, மஹா தீபம் கண்டு வழிபட்டனர். லட்சக்கணக்கானோர் சென்றதால், கிரிவல பாதை பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. இதனால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.