தீர்த்தவாரி தைப்பூச ஜெடிபந்தன கும்பாபிஷேகம்
ADDED :3649 days ago
திண்டுக்கல்: தைப்பூச தீர்த்தவாரி கமிட்டியின் சார்பில், திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு ஜெடிபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் முடிந்து, முருகனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஜேகம், பஞ்சலோக சுப்பிரமணிய சுவாமிக்கு ஜெடிபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. தேன், மஞ்சள், பழச்சாறுகள் அடங்கிய 16 வகை அபிஷேகங்கள், 108 சங்காபிஷேகம் நடந்தது.கோட்டை மாரியம்மன் கோயில் நிர்வாகி சண்முக முத்தரசப்பன், நன்மைதரும் 108 விநாயகர்கள் கோயில் நிர்வாகி மருதநாயகம் செய்திருந்தனர்