ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :3649 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை பெரியகடைவீதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை ஏகாதசி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இம்மாத வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், 9 வகை அபிேஷமும், 9 வகை மலர்களும் பூஜையில் வைக்கப்பட்டன. நுாற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.