பாலாற்றங்கரையில் லட்ச தீப விழா
ADDED :3648 days ago
வேலூர்: வேலூர் சேண்பாக்கம் பாலாற்றங்கரையில் ராகவேந்திர ஸ்வாமிகள் சில வாரம் தங்கி பூஜை செய்த பிருந்தாவனம் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, லட்ச தீப திருவிழா நேற்று மாலை, 6 மணிக்கு நடந்தது. இதற்காக கோவில் முழுவதும் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளில் பக்தர்கள் தீபம் ஏற்றினர். அதனால் கோவில் முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது. பிறகு ராகவேந்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.