சுகவனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா
ADDED :3648 days ago
சேலம்: சேலம், செரிரோடு பகுதியில் உள்ள, பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைக்கு பின், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. மாலை, 6.30 மணிக்கு, கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவில் வளாகம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களின் கோஷத்துக்கு இடையே, சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.