உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவிலில் கார்த்திகை தீபம்

செஞ்சி கோவிலில் கார்த்திகை தீபம்

செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு மாலை 5 மணி முதல் அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வெங்கடரமணர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், கார்த்திகை அகல் விளக்கேற்றினர். சிறுகடம்பூர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை 4 மணிமுதல் 8 மணிவரை சிறப்பு ஹோமம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !