உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை கோவிலில் சிறப்பு தபால் நிலையம்

சபரிமலை கோவிலில் சிறப்பு தபால் நிலையம்

கோவை: ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஆண்டு தோறும், சபரிமலையில், சீசன் காலத்தில் சிறப்பு தபால் நிலையம் திறக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான சிறப்பு தபால் நிலையம், 16ம் தேதி முதல் செயல்படுகிறது. கோவிலுக்கு வர இயலாத பக்தர்கள், தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி அழைப்பிதழ்களை தபால் மூலம் சபரிமலைக்கு அனுப்பி வைப்பர். இவ்வாறு பெறப்படும் தபால்களை சேகரித்து சபரிமலை சன்னதிக்கு அனுப்பி வைப்பதே இந்த தபால் நிலையத்தின் முக்கியப் பணி. இது தவிர, ஸ்பீடு போஸ்ட், இ-மணியார்டர், பதிவு தபால் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும், 30 லட்சம் ரூபாய் வரையிலான மணியார்டர்கள், இந்த தபால் நிலையம் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. மொபைல் ரீசார்ஜ் கார்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தபால் நிலையத்தின் தற்காலிக பின்கோடு எண், 689 713 ஆகும். மேலும் விவரங்களுக்கு, 04735 202130 எண்ணில், தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !