பிள்ளையார் சுழியின் தத்துவம் என்ன?
ADDED :4001 days ago
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம், ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. ஓம் என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம் அது. அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம் நீண்டிருக்கும் கோடு ஆவிடை, மொத்தத்தில் சிவலிங்க ரூபமாக அமைகிறது. எடுத்த செயலை இடையூறு இன்றி நிறைவேற்ற பிள்ளையாரை நினைத்து எழுதும் பிரம்ம எழுத்து அது. ஓங்கார வடிவமான விநாயகப் பெருமானை உணர்த்தும் சுழியே பிள்ளையார் சுழியாகும்.