கடவுளுக்கு நாம் செய்ய வேண்டிய 16 வகை பணி விடைகள் எவை?
ADDED :4001 days ago
கடவுளை விருந்தினர் போலப் பாவித்துச் செய்யும் பதினாறு வகையான பணிவிடைகளை இங்கு பார்ப்போம்.
1. ஆசனம் - அமர்வதற்கு தவிசு அளித்தல்
2. பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல்
3. அர்க்யம் - கை கழுவ நீர் கொடுத்தல்
4. ஆசமநீயம் - பருகுவதற்கு நீர் வழங்குதல்
5. அபிஷேகம் - திருமுழுக்கு நீர் ஆட்டுதல்
6. வஸ்த்ரம் - அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.
7. கந்தம் - நறுமணப் பொருட்கள் வழங்குதல்
8. புஷ்பம் - மலர் மாலைகள் சூட்டுதல்
9. தூபம் - அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்
10. தீபம் - ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
11. நைவேத்தியம் - உணவுப்பொருட்கள் படைத்தல்
12. கற்பூரம் - கற்பூரம் கொளுத்திக் காட்டிப் பணிதல்
13. சாமரம் - கவரி வீசுதல்
14. ஆலவட்டம் - விசிறி கொண்டு வீசுதல்
15. சத்ரம் - குடை கவித்தல்
16. தர்ப்பணம் - கண்ணாடி காட்டுதல்.