செல்வம் பெருக வைக்கும் ஐதீகங்கள் என்னென்ன?
ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி கடாட்சம் பெருகி வீட்டில் செல்வம் தாண்டவமாட கீழ்கண்ட சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.
1. தினசரி அதிகாலை 5 மணிக்கே எழுந்து முதலில் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து பின்னர் தலை வாசலைத் திறக்க வேண்டும்.
2. காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பசு, தன்முகம், தன் வலது உள்ளங்கை ஆகியவற்றில் ஒன்றைப் பார்க்க வேண்டும்.
3. சுமங்கலிப் பெண்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெறும் கையுடன் அனுப்பாமல் குங்குமம் தண்ணீரும் வழங்க வேண்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி வீட்டில் பாக்கியங்கள் பெருகும்.
4. வீட்டில் தரித்திரியத்தை அண்டவிடாமல் செய்வதும் ஐஸ்வர்யம் பெருக வைக்கும் ஒரு வழியாகும். தரித்திரம் வீட்டில் அண்டாமல் இருக்க கீழ்க்கண்ட சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
(1) பாக்கு இல்லாமல் சுண்ணாம்பு வெற்றிலை போடக் கூடாது.
(2) நாம் உடுத்தியிருக்கும் துணியின் மீது தையல் வேலை நடத்தக் கூடாது. துணியை கழற்றியே தைக்க வேண்டும்.