உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் நந்தியை வழிபடும் முறை!

சிவன் கோயில்களில் நந்தியை வழிபடும் முறை!

சிவன் கோயில்களில் நந்திகேஸ்வரரை வழிபடும்போது அவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியமாக படைத்து நெய்விளக்கு ஏற்றி வில்வ இலைகளால் அலங்காரம் செய்து அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிரதோஷ நாளில் வழிபடுவது மிகச் சிறந்ததாகும். நந்திகேஸ்வரர், ருத்ரன் என்று திருநாமம் கொண்டும் அழைக்கப்படுகிறார். ருஹ் என்றால் துயரம்  த்ரன் என்றால் விரட்டுபவன் என்று பொருள் அதாவது துயரங்களை விரட்டுபவன் என்று பொருள்படியாக அருள்கிறார் நந்தி! ரிஷப தேவர், இடபதேவர் என்ற பெயர்களிலும் இவர் வழங்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !