உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழுக்கு சாமியார் கோவிலில் வழிபாடு

அழுக்கு சாமியார் கோவிலில் வழிபாடு

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், வேட்டைக்காரன்புதுார் அழுக்கு சாமியார் கோவிலில், 96ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று வழிபட்டார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், புதுச்சேரியை, தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். குரு பூஜை விழாவில், ஆண்டுதோறும் பங்கேற்பது வழக்கம்; அதுபோலவே இந்தாண்டும் வந்துள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !