உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்குவீரபாண்டியில் சேவை முகாம்!

சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்குவீரபாண்டியில் சேவை முகாம்!

தேனி: வீரபாண்டியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கமும், மாவட்ட காவல் துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு 24 மணிநேர சேவை வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

அகில பாரத அய்யப்பா சேவா சங்க மாவட்ட கவுரவ தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன், மாநில தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மதுரை மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், உயர்மட்ட குழு ஆலோசகர் பாரி, வீரபாண்டி பேரூராட்சி செயல்அலுவலர் செந்தில்குமார், டாக்டர் சரஸ்வதி, பொருளாளர் முத்தையா, இணைச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.வீரபாண்டி சரஸ்வதி மஹாலில் நடைபெறும் சேவை முகாம் ஜனவரி 17ம் தேதி வரை 24 மணிநேரமும் செயல்படும். யாத்திரை வரும் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம், தங்கும் வசதி, காலுறை, இருமுடியில் ஒளிரும் ஸ்டிக்கர், சபரி மலையில் உள்ள தகவல் மைய விபரம், சோதனை சாவடியில் யாத்திரை டிரைவர்களுக்கு சுக்குமல்லி, காபி வழங்கியும், ஒய்வு எடுத்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர். குழுவாக வரும் பக்தர்கள் முன் கூட்டியே 99423 69966 என்ற அலைபேசிக்கு தகவல் தெரிவித்தால் சிறப்பான சேவை செய்ய தயாராக இருப்பார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !