சங்கடஹர சதுர்த்தி பூஜை!
ADDED :3639 days ago
சிவகங்கை: சிவகங்கை, கவுரிவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர் பிரகாரத்தை வலம் வந்தார். காரைக்குடி: ஆலங்குடியார் வீதி சோவாரி விநாயகர் கோயிலில், மாலை 6 மணிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கும்பஜெபம், கணபதிஹோமம், சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடந்தது.மடப்புரம்: மடப்புரம் விலக்கில் திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயிலில், சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.