உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா!

அவிநாசி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா!

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 26ல் ஆருத்ரா மஹா தரிசன பெருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், திருவாதிரை பெருநாள் உற்சவம் மற்றும் ஆருத்ரா மஹா தரிசன விழா நடைபெறும். இந்தாண்டு விழா, 17ல், ஸ்ரீமாணிக்கவாசக பெருமான், திருவாதிரை நாச்சியார் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது; 25 வரை, தினமும் காலை மற்றும் மாலையில், திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். வரும், 25ல், திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், கோவிலில் ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய நோன்பு நடக்கிறது. 26, அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜ பெருமான், சிவகாமி அம்மைக்கு ஆரூத்ரா மஹாபிஷேகம் நடைபெறுகிறது; நடராஜ பெருமானுக்கு, 48 திரவியங்களில் மஹாபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !