இடைக்காட்டூர் திருஇருதய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :3600 days ago
மானாமதுரை: இடைக்காட்டூர் திருஇருதய தேவாலயத்தில் சென்னை மக்கள் மழை பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.நேற்று நடந்த சிறப்பு பிரார்த்தனையில் சென்னையில் மழை,வெள்ளம் காரணமாக பொது மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.அதில் இருந்து மீண்டு வரவேண்டும்,மழை குறைய வேண்டும்,வெள்ள நீர் வடிந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அருள்தாஸ்,இடைக்காட்டூர் பங்குதந்தை ரெமிஜியஸ் தலைமையில் ஏராளமானோர் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.