உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயமோகனின் கீதை சொற்பொழிவு

ஜெயமோகனின் கீதை சொற்பொழிவு

பழம் பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை, நவீன நாவல் வடிவத்தில் எழுதிவரும் எழுத்தாளர் ஜெயமோகன், கோவையில் பகவத்கீதை குறித்து நவீன நோக்கில், நான்கு நாட்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். இதுகுறித்து கூறும் ஜெயமோகன், கீதை குறித்து சிந்திக்கும் ஒரு நவீன இளைஞன், அதை எப்படி அணுகலாம் என்பதை பற்றி மட்டுமே நான் பேசப்போகிறேன். ஆகவே, அதை ஒரு மத நுாலாகவோ, புனித நுாலாகவோ அணுகப்போவதில்லை. இலக்கிய நுாலாக, தத்துவ நுாலாக, ஆன்மிக நுாலாக மட்டுமே அணுக விரும்புகிறேன், என்கிறார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கோவை கிக்கானி மேல் நிலைப்பள்ளியில், டிச., 6 முதல் 9 வரை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில், ஆன்மிக சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !