சவேரியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா
ADDED :3798 days ago
விழுப்புரம்: விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி கொடியேற்றமும், 26ம் தேதி தேர்பவனியும், 28ம் தேதி இளைஞர்களுக்கான சிறப்பு தியானம் நடந்தது. தொடர்ந்து, 29ம் தேதி நற்செய்தி பெருவிழாவும், 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை தேர்பவனியும நடந்தது. பின், நேற்று முன்தினம் காலை புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில், பங்கு பெருவிழா ஆடம்பர கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.