ஜவாயுபுரீஸ்வர சுவாமி கோயிலில் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம்!
காரைக்கால்: திருப்பட்டினத்தில் ஜவாயுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் நேற்று கொட்டும் மழையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் தி ருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி அம்பாள் உடனமர் ஜடாயுபுரீஸ்வர சுவாமி திருக்கோயில்,மெய்கண்ட விநாயகர் ஆலயம் மற்றும் நிறுத்தன காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று கொட்டு மழையில் நடைபெற்றது. திருமலைராயன் அரசாட்சி புரிந்ததால் திரு மலை ராயன்பட்டினம் எனும் பெயர்பெற்றதும், ஜடாயுவினால் பூஜை செய்யப்பட்டு அதனாலேயே ஜடாயுபுரீஸ்வரர் எனும் திருநாமத்தை கொண்ட இறைவனை தன்னகத்தேயுடையதும் 1008 சிவஸ்தலங்களில் ஜடாயுபுரம் எனும் புகழ்சுமக்கும் திருமலைராயன் பட்டினத்தில் சூரியனாலும் தன்னுயிர் புகழ்க்கு விற்ற ஜாடாயுவாலும் ஜடாபு வீடுபேறு பெறுவதற்காக இராம பிரானாலும் பூசிக்கப் பெற்ற அஞ்சனாட்சி அம்பாள் சமேத ஜடாயுபுரீசுவரசுவாமி, சகல பரிவார மூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அருள்மிகு மெய்கண்ட விநாயகர் ஆலயத்திற்கும் மற்றும் நிறுத்தனகாளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. பின் நேற்று யாகசாலைகள் முடிந்து ராஜகோபுரம், ஜடாயுபுரீஸ்வர், அஞ்சனாட்சி அம்மன்,அஷ்டாதசபுஜ மகாலெஷ்மி, துர்க்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் 100க்குமேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் தரிசனம் செய்தனர்.