விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் பவனி!
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலய தேர் பவனி மின்னொளியில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆலய ஆண்டு திருவிழாவை நவ.,27ல் பாதிரியார் ஞானபிரகாசம் கொடியேற்றி துவக்கி வைத்தார். விழா நாட்களில் திருப்பலி, மறையுரை நடந்தது. முக்கிய நாளான நேற்றுமுன்திம் புனித பிரான்சிஸ் டீ சேல்ஸ் சபையின் தென்கிழக்கு மாநில சபை தலைவர் பாதிரியார் தர்மராஜ், பாதிரியார் ராஜ÷ சகர் தலைமையில் மறையுரை நடந்தது. அதை தொடர்ந்து தூய சவேரியார், தூய லுõர்து அன்னை, மிக்கேல் அதி தூதர் உருவம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வருதல் நடந்தது. இது ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம், கடை வீதி, தேவர் சிலை, பாண்டியன் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்.நகர் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பாதிரியார் சூசைராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின் கொடியிறக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எ ப்.எஸ்., பள்ளி முதல்வர் பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் செய்திருந்தார்.