உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்

வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்

மோகனூர்: மோகனூர் அடுத்த, வளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து, கடந்த இரண்டு நாட்களாக, பால் வடிகிறது. இது அப்பகுதி முழுவதும் பரவியது. அதை தொடர்ந்து, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என, பலரும் வந்து மரத்தில் இருந்து வடியும் பாலை ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் கண்டனர். மேலும், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வேப்பமரம், அரசு மரம், ஆலமரம் என, மூன்று மரங்கள் ஒன்றாக இருப்பதால், அது தெய்வீக மரம்தான். கடந்த, இரண்டு நாட்களில், ஏராளமானவர்கள் வந்து பார்த்தும், வழிபட்டும் செல்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !