திருநீர்மலை ரங்கநாதர் கோவில் 50 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED :3591 days ago
சென்னை: திருநீர்மலை ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டனர். பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் உள்ள ரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான, 115 ஏக்கர் நிலம், திருநீர்மலைப் பகுதியில் ஆங்காங்கே உள்ளது. அதில், சென்னை புறவழிச் சாலையொட்டி உள்ள ௫௦ ஏக்கர் நிலத்தை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வரும் தனியார் நிறுவனம் ஒன்று, நேற்று பிற்பகல், ௩:௩௦ மணியளவில் ஆக்கிரமிக்க முயன்றது. தகவல் அறிந்த இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், அங்கு விரைந்து, நிலத்தை மீட்டனர். இதுகுறித்து, சங்கர்நகர் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.