காளிங்கநர்த்தன கிருஷ்ணர்!
ADDED :3989 days ago
சென்னைக்கு அருகில், திருத்தணி - நாகலாபுரம் சாலையிலுள்ள நெல்மேலி தலத்திலுள்ள பெருமாள் கோயிலில் காளிங்கநர்த்தன கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இதன் அழகைச் சொல்ல ஆயிரம் நாபடைத்த ஆதிசேஷனாலும் முடியாது. இவருக்கு பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாவது அதிசயம். இதில் காளிங்கனின் தலைமிதித்து ஆடும் கிருஷ்ணன், கைகுவித்து வணங்கியபடி காணப்படும் தோற்றம் விசித்திரமானது. இந்த கிருஷ்ணருக்கு ரோகிணி நட்சத்திரநாளில் திருமஞ்சனமும் ஆராதனையும் செய்வதால் ராகு - கேது தோஷ நிவர்த்தி ஏற்படுவதுடன் திருமணம், பிள்ளைப்பேறு போன்ற வரங்களும் ஈடேறும் என்பது நம்பிக்கை.