உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா துவக்கம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா துவக்கம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன், இன்று இரவு, 7 மணிக்கு துவங்குகிறது.  வைணவ தலங்களில் வைகுந்த ஏகாதசி விழா முக்கிய விழாவாகும். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிசம்பர், 10ம் தேதி நாளை வைகுந்த  ஏகாதசி விழா துவங்குகிறது. வருகிற, 21ம் தேதி சொற்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. நாளை மாலை, 7 மணிக்கு கர்ப்பகிரஹத்தில் திருநெடுந் தாண்டகம் துவங்குகிறது. 7.45 மணிக்கு  சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம், அபிநயமும், வியாக்னயானமும், 9 மணிக்கு திருப்பணியாரம்  அமுது செய்தல், 10 மணிக்கு திருவாராதனம், 10.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் இருந்து சிறப்பு அலங்காரம், இரவு, 11 மணிக்கு தீர்த்த கோஷ்டி  நடைபெறும்.

விழாவின் இரண்டாவது நாளான, 11ம் தேதி பகல் பத்து மற்றும் ராப்பத்து நிகழ்ச்சி துவங்குகிறது. டிசம்பர், 20ம் தேதி ஞாயிற்று கிழமை மோகினி  அலங்காரமும், 21 ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. டிசம்பர், 27 ம் தேதி திருக்கைத்தல சேவையும், 28 ம் ÷ ததி வேடுபறியும், 30ம் தேதி தீர்த்தவாரி, 31ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.  காலை, 6 மணி முதல், 12 மணி வரையும், பகல், 1.15 மணி  முதல், மாலை, 4.30 மணி வரை  முத்தங்கி அலங்கார சேவை உண்டு. மதியம், 12 மணி முதல், 1.15 மணி பூஜை நடைபெறும். விழாவை முன்னிட்டு  மாலை, 4.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !