உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.,20ல் நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் மும்முரமாக நடக்கிறது. இலங்கை மன்னன் சிவபக்தரான ராவணனை ஸ்ரீராமர் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கத்தை உருவாக்கினார். அங்கு பூஜை செய்து, புனித நீராடி சிவனை வணங்கினார். ராமபிரான், சிவனை வழிபட்ட இடத்தில் உருவானதால் ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர்.இக்கோயிலில் கடந்த 5.2.2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் 2013ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், புதியதாக கட்டப்படும் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள், அம்மன் முகப்பு மண்டபம் கட்டுமான பணியால் தள்ளிபோனது.

2016ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பந்தல் கால்கோள்விழாஇதையடுத்து ரூ.7.90 கோடி செலவில் நடைபெற்றுவரும் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.கோயில் கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்களில் மராமத்து பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஜன., 20 தேதி காலை 9.40 முதல் 11 மணிக்குள் கும்ப லக்னத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைக்கான பந்தல் அமைக்க இன்று (டிச.10) வடக்கு நந்தவனத்தில் பந்தல் கால்கோள் விழா நடக்கிறது. என கோயில் அதிகாரி தெரிவித்தார். கோயில் வடக்கு நந்தவன பந்தலில் 108 யாக குண்டம் அமைத்து, 216 சிவாச்சாரியார் கள் மந்திரம் முழங்க ஜன., 15 தேதி(தை 1ல்) முதல் காலயாக பூஜைகள் ஆரம்பமாகிறது. இக்கோயிலில் உருவான பின் தற்போது தான் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 கோபுரங்களுக்கு ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 41 நாள்களே உள்ளதால் திருப்பணிகளை டிச., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !