மாளிகைப்புறம் கோயில் அருகே நீரூற்று: கோயில் கிணறாக மாற்ற முடிவு
சபரிமலை: மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள வற்றாத நீரூற்றை கோயில் கிணறாக மாற்ற தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். மாளிகைப்புறம் கோயில் அருகே வற்றாத நீரூற்று இருந்தது. இதையொட்டி கடைகள் கட்டப்பட்டது. அப்போது இந்த நீரூற்றை சுற்றி கான்கிரீட் சுவர் கட்டி மூடப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அதை திறந்து பார்த்த போது நீரூற்றின் உட்பகுதியில் நான்கு பக்கமும் கருங்கல் சுவர் கட்டப்பட்டு ஒரு சிறிய குளம் போல காட்சியளிக்கிறது. இந்த நீரூற்றை கோயில் கிணறாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலை மாஸ்டர் பிளான் படி மாளிகைப்புறம் கோயிலில் அடுத்தபுனரமைப்பு நடத்த பிளான் தயாரிப்பட்டுள்ளது. அந்த பிளான் படி வடகிழக்கு மூலையில் கிணறு அமைய வேண்டிய இடத்தில்தான் இந்த நீரூற்று உள்ளதால் மேலும் சிறப்பாக அமையும் அன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.