புராதன கோவில், கட்டட பாதுகாப்புக்கு பொறியாளர் குழு நியமனம்
சென்னை: ‘தொன்மையான கட்டடங்களை பாதுகாக்க, பயிற்சி பெற்ற பொறியாளர் குழுவை அமைப்பது குறித்த யோசனையை, அரசு பரிசீலிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழமை வாய்ந்த, தொன்மையான கோவில்களை, புனரமைக்கும் பணியில் ஈடுபடும் போது, சிலைகள் மற்றும் கட்டுமானங்களுக்கு சேதம் விளைவிப்பதாக, பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில், தானாக முன்வந்து, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தொன்மையான கோவில்களுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் குழுவை நியமித்தது. அந்த குழுவும், சில கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. ‘அபசகுனம்’ என காரணம் கூறி, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இடிக்கப்பட்டதாக, திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, புனரமைப்பு என்ற பெயரில், பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்த போது பிறப் பித்த உத்தரவு: மூத்த வழக்கறிஞர் தலைமையிலான குழுவின் அறிக்கையை பரிசீலித்தோம். முக்கியமான அம்சங்களை புறக்கணித்து விட்டு, ÷ காவில்களில் பழுதுபார்க்கும் பணி, புனரமைப்பு பணியை அனுமதித்தால், கூடுதல் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொன்மையான கட்டமைப் புகளை பழுதுபார்க்க, சரி செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய நிபுணத்துவம், அரசிடம் போதுமானதாக இல்லை. ‘பயிற்சி பெற்ற பொறியாளர் குழுவை ஏற்படுத்த வேண்டும்’ என்ற வரலாற்று அறிஞர் நாகசாமியின் பரிந்துரைகளை, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். சென்னையில் உள்ள, ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’யான ஐ.ஐ.டி.,யையும், இதில் ஈடுபடுத்தலாம். மேலும், ‘யுனெஸ்கோ’ அமைப்பின் உதவி, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சாதனங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கான வழிமுறைகள் உருவாகும் வரை, பழமை வாய்ந்த கோவில்களில், அவசரமாக பழுதுபார்க்க வேண்டிய பணிகளை மட்டுமே ÷ மற்கொள்ள வேண்டும். டாக்டர் நாகசாமியின் அறிக்கையை பார்க்கும் போது, புனரமைப்பு பணியில், கோவில்களின் சுவர்கள் மற்றும் துாண்களில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. புராதன பகுதிகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் குறித்த மசோதா, 2009ல் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில், பழமையான நாகரிகம், புராதன கட்டடங்கள் இருந்தும், அவற்றை பாதுகாக்க, தனி யாக சட்டம் இல்லை. ஏராளமான நினைவு சின்னங்களை, தொல்லியல் ஆய்வு துறை மற்றும் மாநில அரசுகளால், பாதுகாக்க முடியவில்லை. சரிய õன பாதை அமைக்கும் வரை, கோவில்கள் புனரமைப்பில், இந்து சமய அறநிலையத்துறை, மெதுவாகச் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு, புராதன கட்டமைப்புகளை அழித்து விடக் கூடாது. எனவே, தேவையான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை, ஜன., 25க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.