உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய் திருடும் கண்ணன்

வெண்ணெய் திருடும் கண்ணன்

சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோயிலின் சிற்பங்கள் அற்புதமானவை. அதிலொன்றுதான் வெண்ணெய் அபகரிக்கும் கண்ணன் சிற்பம் கோபிகையின் கெண்டைக்காலில் தன் மலர்ப்பாதம் பதித்து. பிடிமானத்துக்கு தன் இடக்கரத்தால் அவளது இடையைப் பற்றி, தாவி ஏறி வெண்ணெயை அபகரிக்க முயல்கிறான் கண்ணன். அதற்கு இடம்தராமல் வலக்கரத்தால் பானையைப் பிடித்திருக்கும் கோபிகை. இடக்கரத்தால் கண்ணனை விலக்க முயற்சிக்கிறாள். குழந்தைக் கண்ணனின் ஸ்பரிசத்தால் உண்டான ஆனந்தமும், வெண்ணெய் பறிபோய்விடுமோ என்ற கவலையும் ஒருசேரத்துலங்கும் கோபிகையின் முகமும், கண்ணனின் முகத்தில் தென்படும் குறும்பும் நம்மை வசீகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !