உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து, இரண்டு, இரண்டு!

ஐந்து, இரண்டு, இரண்டு!

மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது இலுப்பைப்பட்டு. இறைவன் நீலகண்டேஸ்வரர்; இறைவி அமிர்தகரவல்லி கையில் அமிர்த கலசத்தை ஏந்தி இறைவி காட்சியளிப்பதால் இப்பெயர். இங்குள்ள தலவிருட்சமான இலுப்பை மரத்தை வலம் வந்து வணங்க சரும நோய்கள் மறைகின்றன. புத்திரப்பேறு கிட்டுகிறது. இங்கு ரோமச முனிவரின் திருவுருவச் சிலை உள்ளது. இவருடைய ஆலோசனையின்படி பஞ்சபாண்டவர்கள் நிறுவிய ஐந்து லிங்கங்கள், இரண்டு சுப்பிரமணியர்கள் இரண்டு சண்டிகேஸ்வரர்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !