உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியப் படிக்கட்டுகள்!

சத்தியப் படிக்கட்டுகள்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செங்கோட்டு வேலவர் தன் கையில் சேவலை ஏந்தியபடி தரிசனமளிக்கிறார். கோயில் படிக்கட்டு அருகில் 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை உள்ளது. இங்குள்ள 60 படிக்கட்டுகளை சத்தியப் படிக்கட்டுகள் என்பர். பல வழக்குகள் இந்தப் படிக்கட்டில் தீர்க்கப்படுகின்றன. ராகுதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !