உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இணை ஆணையர் நிலைக்கு அழகர்கோவில் தரம் உயர்வு

இணை ஆணையர் நிலைக்கு அழகர்கோவில் தரம் உயர்வு

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகம், துணை ஆணையர் நிலையில் இருந்து இணை ஆணையராக தரம் உயர்த்தப்படுகிறது.இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. சித்திரை திருவிழா, ஆடித் தேரோட்டம் போன்றவை இங்கு நடக்கும் முக்கிய விழாக்கள். மலை அடிவாரத்தில் உள்ளதாலும், மலை மீது சோலைமலை முருகன் கோயில் மற்றும் நுாபுரகங்கை தீர்த்தம் உள்ளதாலும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சோலைமலை முருகன், நுாபுரகங்கை, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசபெருமாள், வண்டியூர் பெருமாள் மற்றும் ஐயப்பன் கோயில்கள் அழகர்கோயில் கட்டுப்பாட்டில் உள்ளன. உதவி ஆணையர் அந்தஸ்தில் இருந்த இக்கோயில் 1993ல் துணை ஆணையராக தரம் உயர்ந்தது. துணை ஆணையர் வரதராஜன் கடந்த ஆகஸ்ட் மாற்றப்பட்டார். திருப்பரங்குன்றம் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக இக்கோயிலை கவனிக்கிறார். கோயிலில் ஆண்டு வருவாய் ரூ.12 கோடிக்கு மேல் அதிகரித்ததால் இணை ஆணையர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து விரைவில் உத்தரவு வெளியாகும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !