ரூ.90 லட்சம் செலவில் மகாமக குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_50114_181507418.jpgரூ.90 லட்சம் செலவில் மகாமக குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_50114_181534378.jpgரூ.90 லட்சம் செலவில் மகாமக குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் திருவிழாவையொட்டி, தீர்த்தவாரி நடைபெறும் மகாமக திருக்குளத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தற்போதுள்ள நீர், சேறு, சகதிகளையும் முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக ஆற்று மணல் நிரப்பும் பணி இன்று தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி விழா தொடர்புடைய 12 சிவாலயங்களிலும், 5 வைணவத்தலங்களில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாமக தீர்த்தவாரி பிப்ரவரி 22ம் தேதி மகாமக திருக்குளத்தில் நடைபெறுகிறது. இவ்விழா நடைபெறும் 10 நாட்களிலும் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, தீர்த்தவாரி நடைபெறும் மகாமக குளத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில், தற்போது குளத்தில் உள்ள நீரை மோட்டார் பம்பு செட் மூலம் அகற்றுவதுடன், குளத்தில் அடிபாகத்தில் உள்ள மண் திட்டு, சேறு சகதிகளையும் முழுமையாக அகற்றி புதிதாக ஆற்று மணல் நிரப்பும் பணி இன்று முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், பொற்றாமரைக்குளம் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய நீரை அகற்றி, புதிய ஆற்று மணல் நிரப்பும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், அத்துடன் கும்பகோணம் நகர எல்லைக்குட்பட்ட காவரியாற்றில் உள்ள 20 படித்துறைகள் மற்றும் அரசலாற்றில் உள்ள 16 படித்துறைகள் ரூபாய் 2 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட இருப்பதாகவும், ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் நகர எல்லைக்குட்பட்ட காவிரி மற்றும் அரசாலாற்றில் உள்ள மண் படிமங்கள், புதர்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடி கொடிகள் அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும், பொதுப்பணித்துறை திட்ட இல்லத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்க திட்ட இல்லம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தப்பட இருப்பதாகவும், பக்தர்கள் பயன்பாட்டிற்காக காவிரியாற்றின் குறுக்கே பூம்புகார் கல்லணை சாலையில் இருந்து டாக்டர் மூர்த்தி சாலையை இணைக்க, 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரும்பு நடைப்பாலம் அமைக்கபட இருப்பதாகவும் கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.