திருச்சானூர் பிரம்மோற்சவம்: பெரிய சேஷ வாகனத்தில் தாயார் வீதிஉலா!
ADDED :3559 days ago
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவம் டிச., 8ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில், தாயார் தினமும் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று, காலை பத்மாவதி தாயார் பெரிய சேஷ வாகன வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு அம்ச வாகன வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.